வணிகம்

ஏற்றத்தில் ரிலையன்ஸ் பங்குகள்!

வெளிநாடு நிதி வரத்து, கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வாங்கி குவித்ததால் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று உச்சத்தில் முடிவடைந்தது.

DIN

மும்பை: வெளிநாடு நிதி வரத்து, கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வாங்கி குவித்ததால் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று உச்சத்தில் முடிவடைந்தது.

தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சென்செக்ஸ் 211.16 புள்ளிகள்  உயர்ந்து 62,504.80-ல் நிலைபெற்றது. பகலில் இது 407.76 புள்ளிகள் உயர்ந்து அதன் வாழ்நாள் இன்ட்ரா-டே உச்சமான 62,701.40-யை எட்டியது. தேசிய பங்குச் சந்தை 50 புள்ளிகள் அதிகரித்து 18,562.75-ல் முடிவடைந்தது.

சென்செக்ஸ் பேக்கில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகபட்சமாக 3.48 சதவீதம் உயர்ந்தது, அதைத் தொடர்ந்து நெஸ்லே, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் ஏற்றம் கண்டன. டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் குறைந்து வர்த்தகமானது.

ஆசியாவில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. இதே வேளையில், வோல் ஸ்ட்ரீட் வெள்ளிக்கிழமையன்று குறைந்து முடிந்தது.

சர்வதேச எண்ணெய் பெஞ்ச்மார்க் பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.11 சதவீதம் குறைந்து 81.03 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.

பங்குச் சந்தையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.369.08 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்! மரத்தில் மோதி விபத்து! 5 பேர் காயம்! | California

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT