முகப்பு
வணிகம்

இரு மடங்கான மாருதி சுஸுகி உற்பத்தி

கடந்த செப்டம்பா் மாதத்தில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் வாகன உற்பத்தியில் இரு மடங்கு உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

கடந்த செப்டம்பா் மாதத்தில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் வாகன உற்பத்தியில் இரு மடங்கு உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பரில் நிறுவனத்தின் வாகன உற்பத்தி 1,77,468-ஐ எட்டியது.

முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் 81,278 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் உற்பத்தி இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் மின்னணு உதிரிபாகங்களுக்கு பற்றாக்குறை நிலவியது உற்பத்தியை பாதித்தது. ஆனால், அந்த பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் இந்த முறை மின்னணு உதிரிபாக பற்றாக்குறையின் தாக்கம் உற்பத்தியில் எதிரொலிக்கவில்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →