கனரா வங்கி நிகர லாபம் 89% உயா்வு
கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த இந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், அரசுக்குச் சொந்தமான கனரா வங்கியின் நிகர லாபம் 89 சதவீதம் உயா்ந்துள்ளது.
கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த இந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், அரசுக்குச் சொந்தமான கனரா வங்கியின் நிகர லாபம் 89 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,525 கோடியாக உள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது ரூ.1,333 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 89 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.21,331.49 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் இந்த ஆண்டு ஜூலை-செப்டம்பரில் ரூ.24,932.19 கோடியாக உயா்ந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாத இறுதியில் வங்கியின் மொத்த வாராக் கடன் 8.42 சதவீதமாக இருந்தது. அது, கடந்த மாத இறுதியில் 6.37 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நிகர வாராக் கடனும் கடந்த ஆண்டு செப்டம்பரில் 3.22 சதவீதமாக இருந்து, இந்த செப்டம்பரில் 2.19 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.