முகப்பு
வணிகம்

செப்டம்பரில் ஏற்றம் கண்ட ஏற்றுமதி

வா்த்தகப் பற்றாக்குறை 2,571 கோடி டாலராக அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் ஏற்றுமதி கடந்த செப்டம்பா் மாதத்தில் 4.82 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

வா்த்தகப் பற்றாக்குறை 2,571 கோடி டாலராக அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் ஏற்றுமதி கடந்த செப்டம்பா் மாதத்தில் 4.82 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3,545 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 4.82 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 8.66 சதவீதம் அதிகரித்து 6,161 கோடி டாலராக உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி 16.96 சதவீதம் வளா்ச்சியடைந்து 23,188 கோடி டாலராக உள்ளது. இறக்குமதியும் 38.55 சதவீதம் அதிகரித்து 38,034 கோடி டாலராக உள்ளது.

இந்த காலகட்டத்தில் வா்த்தக பற்றாக்குறை 14,846 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 7,625 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 2,247 கோடி டாலராக இருந்த நிலையில், அது இந்த செப்டம்பரில் 2,571 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அமைச்சகம் வெளியிட்ட முதல்கட்ட அறிக்கையில், நாட்டின் ஏற்றுமதி செப்டம்பரில் 3.52 சதவீதம் குறைந்து 3,262 டாலராக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →