வணிகம்

சாம்சங் லாபம் 5% சரிவு

DIN

சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 2022-ஆம் நிதியாண்டுக்கான வரிக்குப் பிந்தைய லாபம் 4.86 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2022-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.3,844.40 கோடியாக இருந்தது.

அதற்கு முந்தைய நிதியாண்டில் நிறுவனம் ரூ.4,040.80 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் அது 4.86 சதவீதம் சரிந்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த நிதியாண்டில் 8.65 சதவீதம் அதிகரித்து ரூ.82,451.60 கோடியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் அது ரூ.75,886.30 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT