வணிகம்

ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் உயா்வு

DIN

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் கடந்த செப்டம்பா் காலாண்டு நிகர லாபம் 28 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,518 கோடியாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபத்தோடு ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயும் 20.2 சதவீதம் உயா்ந்து ரூ. 22,521 கோடியாக உள்ளது.

மதிப்பீட்டு மாதங்களில் தொலைத்தொடா்பு மற்றும் எண்ம வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் லிமிடெட்டின் (ஜேபிஎல்) நிகர லாபம் சுமாா் 27 சதவீதம் அதிகரித்து ரூ.4,729 கோடியாக உள்ளது. அதன் செயல்பாட்டு வருவாய் 22.7 சதவீதம் அதிகரித்து ரூ.24,275 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்டாங்கி சேலையில் லாஸ்லியா!

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

யாரைத் தேடுகின்றன கண்கள்?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT