வணிகம்

சிஎன்ஜி மாடல் கார்களை அதிகப்படுத்தியது மாருதி சுசூகி!

மாருதி சுசூகி நிறுவனம் தனது பிரீமியம் நெக்சா மாடல்களில் சிஎன்ஜி வசதியை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: மாருதி சுசூகி நிறுவனம் தனது பிரீமியம் நெக்சா மாடல்களில் சிஎன்ஜி வசதியை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிதியாண்டில் சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை 75 சதவீதம் அதிகரித்து 4 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்படும் என்ற கண்ணோட்டத்தால் நெக்ஸா பிரீமியம் ரீடெய்ல் சங்கிலியின் கீழ் விற்கப்படும் வாகனங்களுக்கு சிஎன்ஜி வசதியை விரிவுபடுத்த உள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா தெரிவித்துள்ளது.

மூத்த நிர்வாக இயக்குநர் - (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா இது குறித்து தெரிவிக்கையில், நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் பலேனோ மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவற்றில் 'எஸ்-சிஎன்ஜி' வசதியை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார். இதன் விலை ரூ.8.28 லட்சம் முதல் ரூ.12.24 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாருதி விற்ற 2.3 லட்சம் கார்களை விட இந்த ஆண்டு 4 லட்சம் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்றார் ஸ்ரீவஸ்தவா.

2010-ஆம் ஆண்டு ஈகோ, ஆல்டோ மற்றும் வேகன்-ஆர் ஆகிய மூன்று மாடல்களுடன் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, நிறுவனம் இதுவரை 11 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இன்று எங்களிடம் மொத்தம் உள்ள 16 மாடல்களில் 10 மாடல்களில் சிஎன்ஜி வசதி உள்ளது என்றார் ஸ்ரீவஸ்தவா. மேலும் இரண்டு புதிய மாடல்கள் இணையும் போது 12 மாடல்களாக உயரும் என்றார்.

பலேனோ மற்றும் எக்ஸ்எல்6-ல் சிஎன்ஜி வசதி ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாகவும், நவம்பர் முதல் வாரத்தில் அதன் விற்பனையைத் தொடங்குவோம் என்றார்.

அதே வேளையில், பலேனோ எஸ்-சிஎன்ஜி  இரண்டு வேரியன்டில் கிடைக்கும், ஒன்று டெல்டா மற்றொன்று மேனுவல் டிரான்ஸ்மிஷன் (எம்டி) அதன் விலை ரூ. 8.28 லட்சமாகவும், ஜீட்டா (எம்டி) அதன் விலை ரூ. 9.21 லட்சமாகவும் இருக்கும். அதே வேளையில், எக்ஸ்எல் 6 எஸ்-சிஎன்ஜி ரூ. 12.24 லட்சத்தில் ஜீட்டா (எம்டி) வேரியன்டில் மட்டுமே கிடைக்கும் என்றார்.

நிறுவனத்தின் மற்ற பிரபலமான ஹேட்ச்பேக்கான ஸ்விஃப்ட்டின் உதாரணத்தை மேற்கோள் காட்டி ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ஆகஸ்ட் மாதம் சிஎன்ஜி வசதி அறிமுகப்படுத்திய பிறகு தற்போது அதன் விற்பனை 14-15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சிஎன்ஜி வாகனங்களுக்கான ஒட்டுமொத்த தேவையின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 1,300 - 1,400 முன்பதிவுகள் நடந்ததாகவும், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 1,400 முதல் 1,500 என்ற அளவுக்கு சென்றதாகவும் அவர் கூறினார்.

சிஎன்ஜி விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1,300 முதல் 1,400 வரம்பில் உள்ளது என்றார் ஸ்ரீவஸ்தவா.

சிஎன்ஜி வாகனங்களுக்கான ஆர்டர் புத்தகத்தைப் பொறுத்தவரை, இன்றைய நிலவரப்படி, சிஎன்ஜி வாகனங்களுக்கான முன்பதிவு சுமார் 1.23 லட்சம் யூனிட்கள் நிலுவையில் உள்ளது.

சிஎன்ஜி கன்ட்ரோலர் செமிகண்டக்டர் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய சில பல கூறுகள் கிடைக்காததால், சிஎன்ஜி வாகனங்களுக்கு நீண்ட காத்திருப்பு காலம் ஏற்பட்டது.  இதுவே வேகன்-ஆர் சிஎன்ஜிக்கு ஒரு வாரம் எனவும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் வரை எர்டிகா சிஎன்ஜிக்கு காத்திருப்பு காலம் நீடித்து தற்போது 72,000 யூனிட்கள் நிலுவையில் உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் ஆய்வாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை: மாநில மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடா்புக்கு தனி எண்கள்: கூட்டுறவுத் துறை உத்தரவு

தனியாா் நிறுவனத்தில் திருட்டு: தேடப்பட்டவா் கைது

ஆன்லைன் பங்கு வா்த்தக மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூவா் கைது- சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை

மகளிருக்கான காவல் உதவி செயலி விழிப்புணா்வு

SCROLL FOR NEXT