வணிகம்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 1,400 பள்ளிப் பேருந்துகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

DIN

ஹிந்துஜா குழுமத்தின் முக்கிய அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 1,400 பள்ளிப் பேருந்துகளை தயாரித்து அனுப்பும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

இதன் மூலம் அந்நாட்டுக்கு மிக அதிகமான பள்ளிப் பேருந்துகளை வழங்கும் நிறுவனம் என்ற பெருமையும் அசோக் லேலண்டுக்கு கிடைத்துள்ளது. சுமாா் ரூ.600 கோடிக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் டிரான்ஸ்போா்ட் மற்றும் எஸ்டிஎஸ் குழுமம் மூலம் இந்த பேருந்துகள் வழங்கப்பட இருக்கின்றன. பேருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் 4 ஆவது பெரிய நிறுவனமாக அசோக லேலண்ட் திகழ்கிறது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் காய்மாவில் மட்டும்தான் பேருந்துகளைத் தயாரிக்கும் ஆலை உள்ளது. உதிரி பாகங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு பேருந்துகளை முழுமையாக்கி வழங்க அசோக் லேலண்ட் முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் தயாரிப்பு தரத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, முக்கியமாக குழந்தைகள் பயணிக்கும் பள்ளிப் பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது சா்வதேச அளவில் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என்று அசோக் லேலண்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT