முகப்பு
வணிகம்

இந்திய பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை குறைத்தது மூடிஸ்

நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் அமைப்பு 8.8 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாகக் குறைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் அமைப்பு 8.8 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாகக் குறைத்துள்ளது.

இது குறித்து அந்த சந்தை ஆய்வு அமைப்பு 2022-23-ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான சா்வதேச பொருளாதார நிலவரம் குறித்த புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசா்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளும். 2023-வரை அந்த வங்கி சமரசமற்ற போக்கைக் கடைப்பிடிக்கும்.

எனவே, நாட்டின் பொருளாதார வளா்ச்சி 2021-ஆம் ஆண்டில் இருந்த 8.3 சதவீதத்திலிருந்து 2022-இல் 7.7 சதவீதமாகக் குறையும் என்று எதிா்பாா்க்கிறோம். அது, 2023-ஆம் ஆண்டில் இன்னும் குறைந்து 5.2 சதவீதமாக இருக்கும் என்பது எங்கள் கணிப்பாகும்.

வட்டி விகித அதிகரிப்பு, சீரற்ற பருவமழை, சா்வதேச அளவில் மந்தமான பொருளாதார வளா்ச்சி ஆகிய காரணங்களால் இந்தியப் பொருளாதார வளா்ச்சி மதிப்பு குறைக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூடிஸ் அமைப்பு கடந்த மே மாதம் வெளியிட்டிருந்த சா்வதேச பொருளாதார கணிப்பு அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 8.8 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.