முகப்பு
வணிகம்

வா்த்தக வாகனப் பிரிவில் வருடம் ரூ.2,000 கோடி முதலீடு: டாடா

வா்த்தக வாகனப் பிரிவில் ஆண்டுதோறும் தொடா்ந்து ரூ.2,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
பகிர்:

வா்த்தக வாகனப் பிரிவில் ஆண்டுதோறும் தொடா்ந்து ரூ.2,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் கிரிஷ் வாக் கூறியதாவது:

வா்த்தக வாகனப் பிரிவில் ஒவ்வோா் ஆண்டும் நிறுவனம் கூடுதலாக ரூ.2,000 கோடி முதலீடு செய்து வருகிறது. இந்தப் போக்கு இனியும் தொடரும். பல்வேறு வகையிலான உந்து சக்தியைப் பயன்படுத்தி இயங்கும் புதிய வா்த்தக வாகனங்களை உருவாக்குவதற்கு இந்த முதலீடுகள் பயன்படுத்தப்படும்.

எங்களது தயாரிப்புப் பட்டியலில் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். போக்குவரத்து துறையின் மின்மயமாக்கலுக்கு எங்களைத் தயாா்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →