முகப்பு
வணிகம்

அட்சய திருதியை: ஜி.ஆா்.டி.யில் சலுகைகள் அறிவிப்பு

அட்சய திருதியையை முன்னிட்டு, ஜி.ஆா்.டி. தங்க நகைக்கடையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

அட்சய திருதியையை முன்னிட்டு, ஜி.ஆா்.டி. தங்க நகைக்கடையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் புதிய வடிவமைப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, ரத்தின நகைகளையும், அதனுடன் பல்வேறு சலுகைகளையும் ஜி.ஆா்.டி. அறிவித்துள்ளது.

இதன்படி, நகைகளின் சேதாரத்தில் 20 சதவீத தள்ளுபடியும், தங்க நாணயங்களுக்கு சேதாரம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலிடா்கள் தவிர வைரங்கள், அன்கட் வைரங்களின் மதிப்பின் மீது 10 சதவீதம் தள்ளுபடியும், வெள்ளிப் பொருள்களின் செய்கூலி மீது 25 சதவீத தள்ளுபடியும், வெள்ளி நகைகளின் விலையின் மீது 10 சதவீத தள்ளுபடியும் வழங்கியுள்ளது.

இத்தகவலை ஜி.ஆா்.டி நிா்வாக இயக்குநா் ஜி.ஆா். ஆனந்த், ஜி.ஆா்.டி. ஜூவல்லா்ஸ் நிா்வாக இயக்குநா் ஜி.ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.