வணிகம்

லாபப் பதிவு: 931 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ் 

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை லாபப் பதிவு காரணமாக பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.

 நமது நிருபர்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை லாபப் பதிவு காரணமாக பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.  இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 931 புள்ளிகளை இழந்தது. இதன் காரணமாக ஒரே நாளில் சந்தை மூலதன மதிப்பு ரூ.8.91 லட்சம் கோடி குறைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினச்சத்தில் லாபப் பதிவு இருந்ததால் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. குறிப்பாக, ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி, பொதுத்துறை வங்கி, ஃபார்மா பங்குகள் விலை கடும் சரிவை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. 

சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ. 8.91 லட்சம் கோடி குறைந்து  வர்த்தக முடிவில் ரூ.350.11 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை ரூ.601.52 கோடிக்கு 
பங்குகளை விற்றுள்ளனர்.  உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.294.35 கோடிக்கு பங்குகளை   வாங்கியுள்ளன.


சென்செக்ஸ் கடும் சரிவு:
காலையில் 210.47 புள்ளிகள் கூடுதலுடன்  71,647.66-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக  71,913.078 வரை உயர்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர்,  70,302.60 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 930.88 புள்ளிகள் (1.30 சதவீதம்)  குறைந்து  70,506.31-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,921 பங்குகளில் 612  பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 3,234 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 75 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

29 பங்குகள் விலைகுறைந்தது: சென்செக்ஸ் பட்டியலில் ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டும் 0.19 சதவீதம் உயர்ந்து இருந்தது.  அதே சமயம், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக், 
எம் அண்ட் எம், எஸ்பிஐ, பவர்கிரிட், டெக் மஹிந்திரா ஆகியவற்றின் விலை 2.50 முதல் 4.20 சதவீதம் வரை குறைந்தது. இவை உள்பட மொத்தம் 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 303 புள்ளிகளை இழந்தது: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி,  காலையில் 90.40  புள்ளிகள் கூடுதலுடன் 21,543.50-இல் தொடங்கி அதிகபட்சமாக 21,593.00 வரை உயர்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர், 21,087.35  வரை கீழே சென்ற  நிஃப்டி,  இறுதியில் 302.95 புள்ளிகள் (1.41  சதவீதம்)  குறைந்து  21,150.15-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 204 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,933 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 4 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 465 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவின் ‘சூப்பா்சோனிக்’ ஏவுகணைகளை வாங்கும் ஈரான்

‘நட்பு நாடுகளின் ஆதரவு தொடா்ந்து தேவை’ - உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி

செய்யாறு உழவா் சந்தையில் வேளாண் கண்காட்சி

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் மகா கூட்டு வழிபாடு

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT