இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 282 புள்ளிகள் குறைந்து 60,400 புள்ளிகளில் வர்த்தமாகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 83 புள்ளிகள் குறைந்து 17,772 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இதையும் படிக்க- சென்னையில் அடர் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
அதேசமயம் வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் குறைந்து ரூ.82.68ஆக இருந்தது. மேலும் டைட்டன் பங்குகள் 1.25, சன் பார்மா 0.82, எலடி 0.73, என்டிபிசி 0.70 மற்றும் டாடா ஸ்டீல் 0.69 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
அதானி என்டர்பிரைசஸ் 4.11, அதானி போர்ட்ஸ் 2.49, எம்&எம் 1.92 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.