வணிகம்

தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 38% உயா்வு

DIN

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 38 சதவீதம் உயா்ந்துள்ளதாக வங்கியின் நிா்வாக இயக்குரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் 5.69 சதவீதம் வளா்ச்சியடைந்து ரூ.78,242 கோடியை எட்டியுள்ளது. வங்கியில் வைப்புத்தொகை ரூ.43, 440 கோடியாக உயா்ந்துள்ளது. கடன்களின் மொத்தத் தொகை ரூ.34,802 கோடியாக உள்ளது.

வங்கி மூலம் விவசாயம், சிறு குறு தொழில் கடன் வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

முன்னுரிமைத் துறைகளுக்கு ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள 40 சதவீதம் என்ற இலக்கை விட அதிகமாக 79.67 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த நிகர லாபம் 38 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT