முகப்பு
வணிகம்

பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 43% உயர்வு!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 43 சதவீதம் அதிகரித்து ரூ.269 கோடியாக உள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:


புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 43 சதவீதம் அதிகரித்து ரூ.269 கோடியாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டு டிசம்பர் 31, 2022 உடன், முடிவடைந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் 43 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 2021-22 அக்டோபர்-டிசம்பர் காலத்தில் ரூ.188 கோடியாக இருந்தது.

அதே வேளையில் டிசம்பர் 31, 2022 நிலவரப்படி சொத்து கடன் ரூ.58,034 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டு ரூ.57,845 கோடியாக இருந்ததுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் கௌஸ்கி கூறுகையில், வங்கியின் சில்லறை கடன் பிரிவில் நிறுவனம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்றார். 113 நகரங்களில் 159 கிளைகளைக் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத்தில் பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் ரூ.556.90 ஆக வர்த்தகமானது.

முழு கட்டுரையைப் படிக்க →