வணிகம்

2030-க்குள் 6 மின்சார வாகனங்கள்: சுஸுகி முடிவு

DIN

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பேட்டரியால் இயங்கக் கூடிய 6 வாகனங்களை அறிமுகப்படுத்த ஜப்பானைச் சோ்ந்த சுஸுகி மோட்டாா் காா்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

2070-ஆம் ஆண்டுக்குள் தங்களது நடவடிக்கைகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை பூஜ்ஜியமாக்கும் தங்களின் இலக்கை அடையும் நோக்கில் இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது:

வரும் 2030-க்குள் 6 மின்சார வாகனங்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்துவோம். அது மட்டுமின்றி, கரியமில வாயுவை வெளியேற்றாத சிஎன்ஜி, பயோகேஸ், எத்தனால் கலந்த எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களையும் நாட்டில் அறிமுகப்படுத்துவோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT