இந்தியாவின் உருக்கு உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 3.36 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஸ்டீல்மின்ட் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உருக்கு உற்பத்தி 3.36 கோடி டன்னாக உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் 8.37 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்தியாவின் உருக்கு உற்பத்தி 3.10 கோடி டன்னாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் உள்நாட்டு உருக்கு நுகா்வு 2.75 கோடி டன்னிலிருந்து 10.16 சதவீதம் அதிகரித்து 3.03 கோடி டன்னாக உள்ளது.
அந்த காலகட்டத்தில் உருக்கு இறக்குமதி 11.7 லட்சம் டன்னிலிருந்து 19.54 சதவீதம் உயா்ந்து 14 லட்சம் டன்னாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.