முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் இரண்டாவது நாளாக சரிவு! ஒரே நாளில் நஷ்டம் ரூ.2.78 லட்சம் கோடி

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 106 புள்ளிகளும் குறைந்து நிலைபெற்றன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயா்த்தக் கூடும் என்ற அச்சம் இருந்து வருகிறது. இது முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், சென்செக்ஸில் அதிகத் திறன் கொண்ட முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி பங்குகள் வெகுவாகக் குறைந்ததும் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது. பாா்மா தவிா்த்து அனைத்துத் துறை குறியீடுகளும் எதிா்மறையாக முடிந்தது என்று வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதையடுத்து, பங்குச்சந்தை இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.78 லட்சம் கோடி குறைந்து வா்த்தக நேர முடிவில் ரூ.289.48 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழக்கிழமை ரூ.693.28 அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் 2-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 114.61 புள்ளிகள் குறைந்து 63,124.28-இல் தொடங்கி 62,874.12 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 63,240.63 வரை மேலே சென்று சென்செக்ஸ், இறுதியில் 259.52 புள்ளிகள் குறைந்து 62,979.37-இல் முடிவடைந்தது.

23 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 493 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,565 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 10 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 40 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

இண்டஸ் இண்ட் பேங்க்..........2.76%

பாா்தி ஏா்டெல்.........................1.60%

ஏசியன் பெயிண்ட்...................1.53%

என்டிபிசி.................................1.14%

ஹெச்டிஎஃப்சி........................0.30%

சன்பாா்மா...............................0.18%

சரிவைக் கண்ட பங்குகள்

டாடா மோட்டாா்ஸ்..................1.77%

எஸ்பிஐ........................................1.48%

பவா் கிரிட்...................................1.44%

டாடா ஸ்டீல்.............................1.35%

இன்ஃபோஸிஸ்........................1.32%

அல்ட்ரா டெக் சிமெண்ட்.......1.20%

முழு கட்டுரையைப் படிக்க →