75% வளா்ச்சியைக் கண்ட டொயோட்டா விற்பனை
கடந்த பிப்ரவரி மாதத்தில் டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 75 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 75 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 15,338-ஆக இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 8,745-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 75 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.