வணிகம்

எம்ஆர்எஃப் 4-வது காலாண்டு நிகர லாபம் 2 மடங்கு உயர்வு!

டயர் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.எப்., நிறுவனம் மார்ச் காலாண்டில், நிகர லாபம், இரண்டு மடங்கு அதிகரித்து, ரூ.341 கோடி அதிகரித்துள்ளது.

DIN

புதுதில்லி:  டயர் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.எப். நிறுவனம், மார்ச் காலாண்டில், நிகர லாபம், இரண்டு மடங்கு அதிகரித்து, ரூ.341 கோடி அதிகரித்துள்ளது.

2021-22 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனம் ரூ.165 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், நான்காவது காலாண்டில், ரூ.5,305 கோடிலிருந்து ரூ.5,842 கோடி உயர்ந்துள்ளது என எம்.ஆர்.எப். லிமிடெட் தெரிவித்துள்ளது.

2021-22 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.669 கோடியாக இருந்த டயர் நிறுவனம், 2023 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த முழு நிதியாண்டில் ரூ.769 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருவாய் 2022ஆம் நிதியாண்டில் ரூ.19,317 கோடியிலிருந்து ரூ.23,008 கோடியாக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் போர் காரணமாக 2021-22 நிதியாண்டில் இருந்த மூலப்பொருள் விலைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து, அதுவே நடப்பு நிதியாண்டிலும் நீடித்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் ஆண்டின் பிற்பகுதியில் மூலப்பொருட்களின் விலைகள் குறைந்ததன் எதிரொலியாக நான்காவது காலாண்டு லாபத்திற்கு வழிவகுத்தது என்று எம்.ஆர்.எஃப் தெரிவித்துள்ளது.

ரூ.10 மதிப்புள்ள ஒரு பங்குக்கு ரூ.169 இறுதி ஈவுத்தொகை வழங்க அதன் நிர்வாகக் குழு பரிந்துரைத்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 5.57 சதவீதம் உயர்ந்து ரூ.93,528.40-ஆக முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT