வணிகம்

டிவிட்டருக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம்!

டிவிட்டர் செயலிக்கு போட்டியாக குறுஞ்செய்திகளை அனுப்பும் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN


டிவிட்டர் செயலிக்கு போட்டியாக குறுஞ்செய்திகளை அனுப்பும் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இன்ஸ்டாகிராம் செயலி படங்கள் / விடியோக்களை பதிவிடும் செயலியாகவுள்ளது. விரைவில் டிவிட்டர் போன்று செய்திகளைப் பகிரும் புதிய தளத்தையும் உருவாக்க இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்த செயலியில் மெசேஜ் செய்யும் அம்சம் இருந்தாலும், படங்கள் / விடியோக்கள் பதிவேற்றும் செயலியாகவே இன்ஸ்டாகிராம் அறியப்படுகிறது. 

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், டிவிட்டருக்கு போட்டியாக குறுஞ்செய்திகளை அனுப்பும் புதிய தளத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் ஆரம்பக்கட்ட பயன்பாட்டு முயற்சியில் நிபுணர்கள் மற்றும் சில பயனர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம், பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்ய முடியும் என்றும், செய்திகளின் இணைப்புகளையும் (லிங்க்), புகைப்படங்களையும், விடியோக்களையும் இணைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

SCROLL FOR NEXT