முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு! 20,000-யைக் கடந்த நிஃப்டி!!

பங்குச்சந்தை இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
கோப்புப் படம்
பகிர்:

பங்குச்சந்தை இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.

நேற்று(செவ்வாய்க்கிழமை) 66,174.20 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 66,381.26 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 727.70 புள்ளிகள் உயர்ந்து 66,901.91 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 206.90 புள்ளிகள் உயர்ந்து 20,096.60 புள்ளிகளில் முடிந்தது.

ஹீரோ மோட்டோகார்ப், எம் & எம், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டின.

ஓஎன்ஜிசி, நெஸ்லே இந்தியா, ஈச்சர் மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன. 

எனினும், ரியல் எஸ்டேட் தவிர, மற்ற அனைத்துத் துறைகளும் இன்று ஏற்றம் கண்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →