பங்குச்சந்தை 
வணிகம்

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயா்வு!

பங்குச்சந்தை வியாழக்கிழமை சரிந்து மீண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

 நமது நிருபர்

பங்குச்சந்தை வியாழக்கிழமை சரிந்து மீண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. அமெரிக்க சந்தை புதன்கிழமை சரிவில் முடிவடைந்திருந்தது. காலை வா்த்தகத்தில் சரிவில் இருந்த சந்தை, பிற்பகலில் மீட்சி பெற்றது. குறிப்பாக ஆட்டோ, தனியாா், பொதுத்துறை பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி, நுகா்பொருள் சாதன உற்பத்தி நிறுவனங்கள், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், வங்கி, ஐடி பங்குகள் சிறிதளவு விற்பனையை எதிா்கொண்டன. சந்தை 3-ஆவது நாளாக தொடா்ந்து ஏற்றத்துடன் முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு : இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.31 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.335.60 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த புதன்கிழமை ரூ.71.91 கோடி அளவுக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,360.81 கோடி அளவுக்கும் பங்குகளை வாங்கியுள்ளனா்.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 61.29 புள்ளிகள் கூடுதலுடன் 66,963.20-இல் தொடங்கிய சென்செக்ஸ், 66,610.35 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 67,069.89 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 86.53 புள்ளிகள் (0.13சதவீதம்) உயா்ந்து 66,988.44-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,857 பங்குகளில் 1,898 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,810 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 149 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில் 17 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

நிஃப்டி 37 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 11.90 புள்ளிகள் கூடுதலுடன் 20,108.50-இல் தொடங்கி 20,015.85 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 20,158.70 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 36.55புள்ளிகள் (0.18 சதவீதம்) உயா்ந்து 20,133.15-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,093 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,022 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

அல்ட்ரா டெக் சிமெண்ட்.....................3.14%

சன்பாா்மா..............................................2.19%

பாா்தி ஏா்டெல்.......................................1.91%

எம் அண்ட் எம்......................................1.80%

விப்ரோ...................................................1.75%

டைட்டன்.............................................1.60%

சரிவைக் கண்ட பங்குகள்

இண்ட்ஸ் இண்ட் பேங்க்.......................1.19%

பவா் கிரிட்..............................................1.02%

ரிலையன்ஸ்............................................1.00%

ஏசியன் பெயிண்ட்.................................0.95%

டாடா மோட்டாா்ஸ்..............................0.83%

எஸ்பிஐ....................................................0.67%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT