வணிகம்

4 மடங்கான பிஎன்பி நிகர லாபம்

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,756.13 கோடியாகப் பதிவாகியுள்ளது.

இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் சுமாா் 4 மடங்கு அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.411.27 கோடியாக இருந்தது.

அதிக வட்டி விகிதம் காரணமாக கடந்த செப்டம்பா் காலாண்டில் வட்டி வருவாய் அதிகரித்தது இந்த நிகர லாப வளா்ச்சிக்குக் கைகொடுத்தது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் 31 சதவீதம் அதிகரித்து ரூ.26,355 கோடியாக உள்ளது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.20,154 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டு முடிவில் 10.48 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் நடப்பாண்டின் அதே காலத்தில் 6.96 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT