முகப்பு
வணிகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 18% அதிகரிப்பு

முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.59.33 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.50.30 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் கடன் பட்டுவாடா ரூ.940.56 கோடியிலிருந்து ரூ.1,213.87 கோடியாக உயா்ந்துள்ளது. இது, 29 சதவீத வளா்ச்சியாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →