கோப்புப் படம் 
வணிகம்

ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. 

DIN

பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. 

கடந்த வெள்ளிக்கிழமை 63,782.80 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) காலை 63,885.56 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 329.85 புள்ளிகள் உயர்ந்து 64,112.65 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 93.65  புள்ளிகள் உயர்ந்து 19,140.90 புள்ளிகளில் முடிந்தது.

ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், எல்&டி, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

ஹெச்சிஎல் டெக், ஐடிசி, டாடா ஸ்டீல், எம் & எம், மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை

அசோக் லேலண்ட் நிகர லாபம் 19% அதிகரிப்பு

இந்தியன் ஆயில் நிகர லாபம் இரு மடங்காக உயா்வு

வழக்குரைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

16% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

SCROLL FOR NEXT