பங்குச்சந்தை 
வணிகம்

2 நாள் ஏறுமுகத்துக்கு முற்றுப்புள்ளி: 238 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த மாதத்தின் கடைசி வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது.

 நமது நிருபர்

இந்த மாதத்தின் கடைசி வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. இதையடுத்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 238 புள்ளிகளை இழந்தது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் தாக்கம் இந்தியா உள்பட உலகளாவிய அளவில்  பங்குச்சந்தைகளில் எதிரொலித்து வருகிறது.  இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ஏறுமுகம் கண்டிருந்த உள்நாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.  குறிப்பாக, தனியார் வங்கிகள், ஆட்டோ, ஃபார்மா,  ஹெல்த்கேர், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையைச் சந்தித்தன. இதனால், சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது   என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.311.45 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,761.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை  வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்செக்ஸ்  வீழ்ச்சி:  காலையில் 339.67 புள்ளிகள் கூடுதலுடன்  64,449.65-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 64,452.42 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர்,  63,812.53 வரை கீழே  சென்ற  சென்செக்ஸ்,  இறுதியில் 237.72 புள்ளிகள் (0.37 சதவீதம்) குறைந்து  63,874.93-இல்  முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,760 பங்குகளில் 1,836 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,798 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 126 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
15 பங்குகள் விலை உயர்வு:
சென்செக்ஸ் பட்டியலில்  15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 15  பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.  தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,072 பங்குகள் ஆதாய பட்டியலிலும், 1,027 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.   நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 24 பங்குகள் வீழ்ச்சிப்  பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 61 புள்ளிகள் சரிவு:
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 92.05 புள்ளிகள் கூடுதலுடன் 19,232.95-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,233.70 வரை மட்டுமே மேலே  சென்றது. பின்னர், 19,056.45 வரை கீழே சென்ற நிஃப்டி,  இறுதியில் 61.30 புள்ளிகளை (0.32 சதவீதம்)  இழந்து  19,079.60-இல் நிறை
வடைந்தது. 

ஏற்றம் பெற்ற பங்குகள்
டைட்டன்     2.31%
கோட்டக் வங்கி    1.27%
ஹெச்சிஎல் டெக்    0.97%
ஏசியன் பெயின்ட்    0.97%
பவர்கிரிட்    0,.65%
டெக் மஹிந்திரா    0.56%
சரிவைக் கண்ட  பங்குகள்
எம் அண்ட் எம்    2.59%
சன்ஃபார்மா    2.39%
பார்தி ஏர்டெல்    1.26%
ஐசிஐசிஐ வங்கி    1,.01%
ரிலையன்ஸ்    0.99%
இண்டஸ்இண்ட் வங்கி    0.95%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT