ஐஃபோன் 15 வகை கைப்பேசிகள் அறிமுகமாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் வெளியீடு குறித்து அதிர்ச்சிகரமான தகவல் கசிந்துள்ளது.
ஒருபக்கம், புதிய ஐஃபோன் 15 வகை மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் விண்ணைத்தொட்டிருக்கும் நிலையில், மறுபக்கம், ஐஃபோன் 15 வகை மாடல் குறித்த கணிப்புகளும், புரளிகளும் ஆட்டிப்படைத்து வருகிறது.
வரவிருக்கும் ஐஃபோன் 15 எப்படி இருக்கும் என்ற தகவல் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிலையில், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் வகை கைப்பேசியின் வெளியீடு தாமதமாகும் என்ற அதிர்ச்சித் தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிக்க | நிகழ்ச்சி நிரல் வெளியிட வேண்டும்: மோடிக்கு சோனியா கடிதம்
ரெவேக்னஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, சோனியுடன் உற்பத்தி ரீதியான சிக்கல் காரணமாக, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ்-க்கான இமேஜ் சென்சார் பெறுவது மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் வெளியீடு கிட்டத்தட்ட 4 வாரங்கள் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஃபோன் 15 வகை கைப்பேசியை செப்டம்பர் 12ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாக அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அறிவித்திருக்கிறது.
அன்றைய தினம், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய வகை கைப்பேசிகளும் அறிமுகமாகவிருக்கின்றன.
செப்டம்பர் 12ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ஐஃபோன் 15 மாடல் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த நிகழ்வை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் மக்கள் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.