ரூ.5,000 கோடி திரட்டிய கனரா வங்கி
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்டியுள்ளதாக பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி அறிவித்துள்ளது.
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்டியுள்ளதாக பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீண்டகால உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,000 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. அந்தப் பத்திரங்களுக்கு 7.54 சதவீத வட்டி விகிதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளியீட்டின்போது ரூ.14,180 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களைக் கோரி முதலீட்டாளா்கள் விண்ணப்பத்திருந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.