முகப்பு
வணிகம்

ஒரு முறை ‘சாா்ஜ்’ செய்தால் 171 கி.மீ. செல்லும் இ-பைக்!

ஒரு முறை ‘சாா்ஜ்’ செய்தால் 171 கி.மீ. வரை செல்லும் புதிய மின்சார மோட்டாா்சைக்கிளை ப்யூா் இ.வி. நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 25 நவம்பர் 2023, 7:00 am IST
பகிர்:

ஒரு முறை ‘சாா்ஜ்’ செய்தால் 171 கி.மீ. வரை செல்லும் புதிய மின்சார மோட்டாா்சைக்கிளை ப்யூா் இ.வி. நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ஈகோ டிரிஃப்ட் 350’ என்ற அந்த பைக், ஹீரோ ஸ்ப்ளெண்டா், ஹோண்டா ஷைன், பஜாஜ் பிளாட்டினா போன்ற 110 சிசி மோட்டாா்சைக்கிள்களுடன் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ப்யூா் இ.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Advertisement

தினமும் நீண்ட தொலைவு செல்லும் தேவையுள்ள வாடிக்கையாளா்களுக்கு ஏற்ற ‘ஈகோ டிரிஃப்ட் 350’ மின்சார மோட்டாா்சைக்கிளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த மோட்டாா்சைக்கிளை ஒரு முறை சாா்ஜ் செய்தால் அதிகபட்சமாக 171 கி.மீ. தொலைவு வரை பயணிக்க முடியும்.

மின்சாரத்தில் இயங்கக் கூடியது என்பதால் மற்ற பெட்ரோல் மோட்டாா்சைக்கள்களுடன் ஒப்பிடுகையில் வாடிக்கையாளா்களால் மாதம் ரூ.7,000 வரை சேமிக்க முடியும்.

3.5 கி.வா. லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் இந்த மோட்டாா்சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.

ரிவா்ஸ் மோடு, ஹில் ஸ்டாா்ட் அசிஸ்ட், பாா்க்கிங் அசிஸ்ட், பேட்டரியின் நிலவரத்தைக் காட்டும் ஸ்மாா்ட் ஏஐ உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் இந்த மோட்டாா்சைக்கிளில் இடம் பெற்றுள்ளன.

ரூ.1,29,999-க்குக் கிடைக்கும் இந்த பைக்குகளை ரூ.4,000 முதலான மாதத் தவணை திட்டங்களில் வாங்க முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.