வணிகம்

கார்களை திரும்பப் பெறும் ஹுண்டாய், கியா நிறுவனங்கள்!

DIN

அமெரிக்காவில் ஹுண்டாய், கியா நிறுவனங்களை சேர்ந்த சில மாடல் கார்கள், எளிதில் தீப்பற்றும் ஆபத்து உள்ளதால், அவற்றை சரிசெய்வதற்காக அந்நிறுவனங்கள் திரும்பப் பெற்று வருகின்றன. திரும்பப்பெறப்பட்ட வாகனங்களும் தற்போது ஆபத்தானவையாக மாறியுள்ளன.

அமெரிக்காவில் 34 லட்சம் கார்களை ஹுண்டாய், கியா நிறுவனங்கள் திரும்பப் பெற்றன. இந்த கார்களில் உள்ள பிரேக் ஆயில், ஆன்டி பிரேக்கிங் சர்க்யூட் போர்டில் கசிவதால், மின்பற்றாகுறை காரணமாக தீப் பற்றி எரிவதாக ஹுண்டாய் - கியா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஹுண்டாய் நிறுவனத்தின் சாண்டா ஃபே, எலன்ட்ரா மற்றும் கியா நிறுவனத்தின் ஃபோர்ட் ஆகிய கார்களின் இந்த ஆபத்து நேர்கின்றன. இதனால் இந்த வகை கார்களை வெளியே நிறுத்தவும் வீட்டிலிருந்து தூரத்தில் நிறுத்தவும் அந்நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் 34 லட்சம் கார்களை ஹுண்டாய் - கியா நிறுவனங்கள் திரும்பப் பெற்றன. ஜுன் மாதத்திற்குள் இந்த வாகனங்களை சரிசெய்து வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனால், 9 மதங்களுக்கு மேலாகிவிட்டது.

அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருப்பதாலும், தேவையான உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் நீடிப்பதாலும் இந்தத் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் காரில் டேஷ்போர்டில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு எரிந்தாலோ, தீயும் வாடை வந்தாலோ உடனே அருகிலுள்ள நிறுவனத்தின் கிளை அல்லது விற்பனையாளரை அணுக அறிவுறுத்தியுள்ளது.

வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தபோது 56 வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. ஆனால் அதில் உயிர் சேதம் ஏதும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT