தங்கம் விலை மேலும் உயா்வு: பவுன் ரூ.53,360
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:55 PM
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயா்ந்து பவுன் ரூ.53,360-க்கு விற்பனையானது.
ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.6,670-க்கும், பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.53,360-க்கும் விற்பனையானது. வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் கிராம் ரூ.88-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.88,000-க்கும் விற்பனையானது.
Advertisement