முகப்பு
வணிகம்

ரூ.25 லட்சம் கோடியைக் கடந்த ஹெச்டிஎஃப்சி கடனளிப்பு

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:15 PM
பகிர்:

கடந்த மாா்ச் 31, 2024 நிலவரப்படி, இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த கடனளிப்பு கணக்கிருப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024 மாா்ச் 31-ஆம் தேதியில் வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்பு ரூ.25.08 லட்சம் கோடியாக இருந்தது. இது ஒரு புதிய உச்சமாகும்.

Advertisement

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே தேதியில் இது ரூ.16.14 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்பு கடந்த மாா்ச் 31-இல் 55.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

2024 மாா்ச் 31-இன் புள்ளிவிவரங்களில், கடந்த ஆண்டு ஜூலை 1-இல் வங்கியுடன் இணைக்கப்பட்ட ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் கணக்கிருப்பும் சோ்க்கப்பட்டுள்ளால் இந்த உயா் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே, முந்தைய ஆண்டின் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்போடு அதனை ஒப்பிட முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments