முகப்பு
இந்தியா

ரூ. 1 லட்சம் கோடி இழப்பு... ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் ராஜிநாமா எதிரொலி!

ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் ராஜிநாமா எதிரொலியாக பங்குச்சந்தையில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 19 மார்ச், 2026 at 12:17 PM
பங்குச் சந்தை...
பகிர்:

ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் ராஜிநாமா எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்தியாவில் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவரும் இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி, நேற்று மாலை திடீரென ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்தார். இவரின் திடீர் முடிவு செய்திகளில் வெளியான நிலையில், இன்று காலை இந்திய பங்குச்சந்தையில் ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் ஆட்டம் கண்டன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (மார்ச் 19) காலை 74,750.92 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை அதிகபட்சமாக 2,000 புள்ளிகள் வரை சரிந்தது. அதைத்தொடர்ந்து வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 2,496.89 புள்ளிகள் குறைந்து 74,207.24 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 775.65 புள்ளிகள் குறைந்து 23,002.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. சென்செக்ஸில் 30 பங்குகளும் அதேபோல நிஃப்டியில் அனைத்துத் துறைகளும் இன்று சரிந்தன.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், நிஃப்டி50-ல் ஹெச்டிஎஃப்சி பங்குகள் நேற்றைய விலையிலிருந்து 8 சதவிகிதம் சரிந்தன. கடந்த 52 வாரங்களில் இல்லாத வகையிலான குறைந்தபட்ச மதிப்பான ரூ. 772 ஹெச்டிஎஃப்சி பங்குகள் பெற்றுள்ளன. இதனால், முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் மொத்த சந்தை மதிப்பு நேற்று மாலை ரூ. 12.96 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அதானு சக்ரவர்த்தியின் பதவி விலகலால், ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இன்று மாலை நிலவரப்படி, ரூ. 11.88 லட்சம் கோடியாக நிலைபெற்றுள்ளது.

ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் மார்ச் மாதத்தில் மட்டும் 9 சதவிகிதம் சரிந்து கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளன. ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் கடந்த ஓராண்டில் மட்டும் 15 சதவிகிதம் வரை சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

summary

The sharp crash in HDFC Bank shares following the resignation of part-chairman Antanu Chakraborty, citing differences over "values and ethics", has significantly eroded investor wealth as the overall market capitalisation of India's largest private lender briefly slipped below the ₹12 lakh crore mark.

முழு கட்டுரையைப் படிக்க →