FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!

சென்செக்ஸ் 442.93 புள்ளிகள் சரிந்து 77,708.52 புள்ளிகளாகவும், நிஃப்டி 95.80 புள்ளிகள் சரிந்து 24,238.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 20 ஜூலை 2026, 5:44 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள், தொடரும் உலகளாவிய மந்த நிலை மற்றும் தனியார் வங்கிப் பங்குகளின் ஜூன் காலாண்டு நிதி முடிவுகள் ஆகியவை தொடர்ந்து, இன்றைய வர்த்தக அமர்வில், தொடர் விற்பனை நிலவியதால், இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தன.

பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலருக்கும் அதிகமாக சென்ற கச்சா எண்ணெய் விலையால், பங்குச் சந்தையில், முதலீட்டாளர்களின் நம்பிக்கை இது முற்றிலுமாக குலைத்தது. இதனால் வர்த்தகம் தொடங்கியவுடனேயே நிஃப்டி குறியீடு 24,200 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது. இருப்பினும், வர்த்தக அமர்வின் இரண்டாம் பாதியில் வாங்கும் ஆர்வம் ஏற்பட்டதால், இன்றைய இழப்பின் பெரும்பகுதியை மீட்டெடுத்தது வர்த்தகம் நிறைவடைந்தன.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 442.93 புள்ளிகள் சரிந்து 77,708.52 புள்ளிகளாகவும், நிஃப்டி 95.80 புள்ளிகள் சரிந்து 24,238.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

ப்ளூ-சிப் நிறுவன பங்குகளான பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் கோடக் மஹிந்திரா வங்கி, இன்டர்குளோப் ஏவியேஷன், மாருதி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அதன் வலுவான செயல்பாடுகளால், ஜூன் காலாண்டில் சாதனை அளவிலான லாபம் ஈட்டியதை தொடர்ந்து, அதன் பங்குகள் கிட்டத்தட்ட 1 சதவீதம் உயர்ந்தன.

நிஃப்டி-யில் ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, மாருதி சுஸுகி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. மறுபுறம் ட்ரெண்ட், சிப்லா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், பார்தி ஏர்டெல் மற்றும் ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் ஆகிய பங்குகள் உயர்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.6 சதவீதம் உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் சிறிய அளவிலான ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

வர்த்தக அமர்வின் போது துறைவாரியான செயல்பாடுகள் சற்று கலவையாக இருந்தன. நிஃப்டி-யில் பொதுத்துறை வங்கி பங்குகள் 2.8 சதவீத வளர்ச்சியுடன் சிறப்பாக வர்த்தகமானது. அதைத் தொடர்ந்து பார்மா 1.4 சதவீதமும், மீடியா 1 சதவீகமும், எனர்ஜி 1 சதவீகமும், மெட்டல் 0.86 சதவீகமும், ஆயில் & கேஸ் 0.62சதவீகமும், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 0.7 சதவீகமும், எஃப்எம்சிஜி 0.6 சதவீகம் மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் 0.72 சதவீகமும் ஏற்றம் கண்டன. மறுபுறம் தனியார் வங்கி 2.2 சதவீதமும், நிஃப்டி வங்கி 1 சதவீதமும், ஆட்டோ மற்றும் ரியாலிட்டி சரிவுடன் நிறைவடைந்தன.

கேப்ரியல் இந்தியா, ஷியாம் மெட்டாலிக்ஸ், நவின் ஃப்ளூரின் இன்டர்நேஷனல், ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், குஜராத் ஃப்ளூரோகெமிக்கல்ஸ், சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா, லாயிட்ஸ் மெட்டல்ஸ் & எனர்ஜி, ரேடிகோ கைதான், திவிஸ் லேபரட்டரீஸ், ஃபெடரல் வங்கி மற்றும் எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

முந்தைய அமர்வில் ரூபாய் மதிப்பு வலுவான மீட்சியை பதிவு செய்த நிலையில், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளானதால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிந்து ரூ. 96.45 ஆக நிலைபெற்றது.

ஆசிய சந்தைகளில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்தன. அதே நேரத்தில் தென் கொரியாவின் கோஸ்பி 4.35 சதவீதம் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரூ. 376.41 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 2.41 சதவீதம் உயர்ந்து 90.22 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Indian equity benchmarks ended lower on July 20.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments