FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

முதல் காலாண்டு லாபம்- எச்டிஎஃப்சி வங்கி: ரூ.19,060 கோடி

நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.19,060 கோடி தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டி, 5 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்தது.

பகிர்:

நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.19,060 கோடி தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டி, 5 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்தது.

அதேநேரம் மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் ரூ.99,200 கோடியிலிருந்து ரூ.92,184 கோடியாக குறைந்தது. ஆனால், சொத்து தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

மொத்த வாராக்கடன் விகிதம் 1.4 சதவீதத்திலிருந்து 1.17 சதவீதமாகவும்; நிகர வாராக்கடன் விகிதம் 0.47 சதவீதத்திலிருந்து 0.41 சதவீதமாகவும் குறைந்துள்ளதால், வாராக்கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.14,442 கோடியிலிருந்து ரூ.3,060 கோடியாக பெருமளவு குறைந்தது.

Advertisement

Advertisement

நிகர வட்டி வரம்பு மொத்த சொத்துகளின் அடிப்படையில் 3.26 சதவீதமாகவும், வட்டி ஈட்டும் சொத்துகளின் அடிப்படையில் 3 சதவீதமாகவும் மட்டுமே பதிவாகி இருந்தது.

இந்த லாப வரம்புச் சரிவு சந்தை எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யாததால், திங்கள்கிழமை வா்த்தக முடிவில் வங்கி பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் முறையே 5.12 மற்றும் 5.08 சதவீதம் வீழ்ச்சியடைந்து, நிலைபெற்றது. இதன்மூலம், வங்கியின் சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.64,685.58 கோடி வரை சரிந்து, ரூ.11.97 லட்சம் கோடியாக குறைந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments