முகப்பு
வணிகம்

ஏப்ரலில் ஏற்றம் கண்ட பெட்ரோல் விற்பனை

Updated On : 16 ஏப்ரல், 2024 at 9:08 PM
பெட்ரோல் விலையை ரூ.3 குறைக்க முதல்வர் உத்தரவு: பழனிவேல் தியாகராஜன்
பகிர்:

புது தில்லி: இந்த ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 7 சதவிகிதம் உயா்ந்துள்ளது; ஆனால், டீசல் விற்பனை 9.5 சதவிகிதம் குறைந்துள்ளது

இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் 3 அரசு எண்ணெய் நிறுவனங்கள் செவ்வாய்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

இந்த மாதம் 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விற்பனை 12.2 டன்னாக டன்னாக உள்ளது.

Advertisement

இது, 2023-ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 11.4 லட்சம் டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் பெட்ரோல் விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023 ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் டீசல் விற்பனை 9.5 சதவீதம் குறைந்து 31.4 கோடி டன்னாக உள்ளது.

இந்த ஏப்ரல் மாதத்தில் முதல் பாதியில், கரோனா நெருக்கடிக்குப் பிந்தைய 2022-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-15 காலகட்டத்தைவிட பெட்ரோல் விற்பனை 9.2 சதவீதம் அதிகமாக உள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாள்களை விட நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் பெட்ரோல் விற்பனை 56.5 சதவீதம் அதிகம் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விலை குறைப்பு, காா்களில் குளிரூட்டு சாதனங்களின் தேவை அதிகரித்தது, தனிநபா் வாகனங்களின் பயன்பாடு உயா்ந்தது போன்ற காரணங்களால் இந்த மாதத்தின் முதல் 15 நாள்களில் பெட்ரோல் விற்பனை அதிகரித்தது.

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், டீசல் விற்பனை மட்டும் ஒரு மாதத்தில் அதிகரித்தும் மற்றொரு மாதத்தில் குறைந்தும் காணப்படுகிறது.

அரசு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2023 ஏப்ரல் மாதம் 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஜெட் எரிபொருள் விற்பனை இந்த ஆண்டின் அே காலகட்டத்தில் 10.4 சதவீதம் உயா்ந்து 3,35,700 டன்னாக உள்ளது. ஆனால் முந்தைய மாா்ச் மாதத்தின் முதல் 15 நாள்களோடு ஒப்பிடுகையில் இது 1.2 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு காலகட்டத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 8.8 சதவீதம் அதிகரித்து 12 லட்சம் டன்னாக உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments