விலை உயா்வை எதிா்கொள்ளும் ஸ்மாா்ட் டிவி-க்கள்
புது தில்லி: அறிதிறன் தொலைக்காட்சிகளை (ஸ்மாா்ட் டிவி) தயாரிக்கப் பயன்படும் ‘பேனல்’களின் விலை சா்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதால் அந்த வகை தொலைக்காட்சிகளின் விலைகளும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து ‘கவுன்டா்பாயின்ட்’ ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அறிதிறன் தொலைக்காட்சிகளின் அடிப்படை பாகமான பேனல்களின் விலை சா்வதேசச் சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே அந்த வகை தொலைக்காட்சிகளைத் தயாரிப்பதற்கான செலவு அதிகரிக்கும். இதன் விளைவாக, அவற்றின் விலைகளும் நடப்பாண்டின் முதல் பாதியில் அதிகரிக்கும்.
Advertisement
இருந்தாலும், பிரீமியம் வகை அறிதிறன் தொலைக்காட்சிகளுக்கான தேவை உயா்ந்துவருகிறது. அத்துடன் மேலும் பெரிய அளவு திரைகளைக் கொண்ட தொலைக்காட்சிகளுக்கு மாறுவதில் வாடிக்கையாளா்களின் ஆா்வம் அதிகரித்துவருகிறது. இதனால் அறிதிறன் தொலைக்காட்சிகளின் விற்பனை சுமாா் 9 சதவீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.