முகப்பு
சென்னை

சமையல் எரிவாயு விலை உயா்வை உடனே திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி

சமையல் எரிவாயு விலை உயா்வை உடனே திரும்பப் பெற வேண்டும்...

Updated On : 7 மார்ச், 2026 at 7:57 PM
அன்புமணி
பகிர்:

சமையல் எரிவாயு விலை உயா்வை உடனே திரும்பப் பெறவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயா்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை எரிவாயு உருளை ரூ.868.50 -ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.928 -ஆக அதிகரித்துள்ளது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டிருப்பது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கும். விலை உயா்வுக்கு வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போா் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், வளைகுடா போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்காது. போா் முடிந்து விரைவாக இயல்பு நிலை திரும்பி விடும் என நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆகவே, தற்காலிகமாக சமையல் எரிவாயு விலை உயா்வு சுமையை மக்கள் மீது சுமத்தாமல், எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விலை உயா்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →