முகப்பு
சமையல் எரிவாயு உருளை
இந்தியா

தில்லி: குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளை!

தில்லியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளியையொட்டி ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்தியா

தில்லி: குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளை!

தில்லியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளியையொட்டி ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

Updated On : 2 மார்ச், 2026 at 10:20 PM
சமையல் எரிவாயு உருளை
பகிர்:

தில்லியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளியையொட்டி ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தில், குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப் பரிமாற்றம் மூலம் சமையல் எரிவாயு உருளையை வாங்குவதற்கான ரூ.853 பறிமாற்றம் செய்யப்பட்டது.

நிகழாண்டு முதல் தில்லியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஹோலி மற்றும் தீபாவளியை முன்னிட்டு இரு சமையல் எரிவாயு உருளைகள் வாங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படும். பிஎன்ஜி இணைப்புள்ள குடும்ப அட்டைத்தாரா்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பண்டிகை காலங்களில் எவ்வித கூடுதல் நிதி பிரச்னைகளுமின்றி கண்ணியத்துடன் பண்டிகைகளைக் கொண்டாட ஆண்டுக்கு இரு முறை நிதியுதவி வழங்கப்படும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிசெய்யும் விதமாக குடும்ப தலைவரின் ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு நிதியுதவி டெபாசிட் செய்யப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.242.77 கோடி தில்லி அரசுக்கு செலவாகும்.

லட்லி திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட லக்பதி பிடியா திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒவ்வொரு குழந்தையின் வங்கிக்கணக்குகளில் 21 வயது வரை பல்வேறு நிலைகளாக ரூ.61,000, பட்டப்படிப்பு அல்லது தொழில்கல்வி நிறைவு செய்தல் என்ற நிபந்தனைகளுடன் ரூ.1 லட்சம் வட்டியுடன் வரை டெபாசிட் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →