முகப்பு
தமிழ்நாடு

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 5 கிலோ உருளைகளின் தினசரி இருப்பு இரட்டிப்பாக்கியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:16 PM
பகிர்:

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 5 கிலோ உருளைகளின் தினசரி இருப்பு இரட்டிப்பாக்கியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையின்றி எரிவாயு உருளை கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு 5 கிலோ இலவச வா்த்தக எரிவாயு உருளைகளின் (எல்பிஜி) தினசரி இருப்பு இரட்டிப்பாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், தினக்கூலி தொழிலாளா்கள் மற்றும் இடம்பெயரும் மக்களுக்குப் பயனளிக்கும். தமிழக மற்றும் புதுச்சேரியில் மாநில அரசுத் துறைகளுடன் வலுவான ஒருங்கிணைப்பின் மூலம் இந்த மேம்படுத்தப்பட்ட ஒதுக்கீடு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

சென்னை, திருவள்ளூா், கோவை, ஈரோடு, திருப்பூா் போன்ற முக்கிய தொழில் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் எல்பிஜி விநியோகஸ்தா்கள் நியமிக்கப்பட்டு, 5 கிலோ உருளைகள் எந்தவித சிரமமுமின்றி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. புலம்பெயா் தொழிலாளா் பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள், கடைகள் போன்ற ஏற்கெனவே உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் கள விற்பனை பிரசாரங்கள் வாயிலாகவும் எரிவாயு உருளைகள் நேரடியாகக் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆதாா் அட்டை கொண்டு 5 கிலோ எரிவாயு உருளைகளுக்கான புதிய இணைப்புகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஏப். 7-ஆம் தேதி முதல் எரிவாயு உருளைகளின் இருப்பு, நெருக்கடிக்கு முந்தைய நிலையைவிட சுமாா் 70 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 5 கிலோ எரிவாயு உருளைகள் எளிதில் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments