வணிகம்

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

Din

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிட்டெட் (சிபிசிஎல்), கடந்த நிதியாண்டில் அதிகபட்ச உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நிறுவனம் 1.16 கோடி மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்துள்ளது. இது, நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர உற்பத்தியாகும். இதற்கு முன்னா் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் உற்பத்தியான 1.13 கோடி மெட்ரிக் டன்னே அதிகபட்ச உற்பத்தியாக இருந்தது.

கடந்த மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.20,823 கோடியாகக் குறைந்தது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.21,350 கோடியாக இருந்தது. 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.79,272 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் அது ரூ.90,908 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT