ரிலையன்ஸ் குழுமம் 
வணிகம்

இந்தியாவில் குடும்ப வணிகங்களில் அம்பானி குழுமம் மிகவும் மதிப்புமிக்கது!

பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் கோலோச்சி வருகிறது.

DIN

மும்பை: பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் கோலோச்சி வருகிறது. இந்நிலையில் ரூ.25.75 லட்சம் கோடியுடன் அம்பானி குடும்பம் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகமாக மாறியுள்ளது என்று இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

பார்க்லேஸ் பிரைவேட் கிளையண்ட்ஸ் ஹுருன் இந்தியா நடத்திய ஆய்வின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் பட்டியலில் பஜாஜ் குடும்பம் ரூ.7.13 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்திலும், பிர்லாஸ் ரூ.5.39 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

அதானி குடும்பத்தின் மதிப்பு பட்டியலில் ரூ.15.44 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை தலைவர்களைக் கொண்ட முதல் தலைமுறை குடும்ப பட்டியலில் அதானி குழுமம் முதலிடத்தில் உள்ளது. அதே வேளையில் சீரம் பூனவல்லா குடும்பம் ரூ.2.37 லட்சம் கோடி மதிப்புள்ள வணிகத்துடன் அவர்களைப் பின்தொடர்கிறது.

ஹுருன் இந்தியாவின் நிறுவனரும் தலைமை ஆராய்ச்சியாளருமான அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, குடும்ப வணிகங்களில் நான்கில் மூன்று பங்கு மதிப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சுக்குள் நீதான்... ருக்மணி வசந்த்!

சீனிப் பழமே... அபர்ணா தாஸ்!

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

SCROLL FOR NEXT