வணிகம்

மொத்தவிலை பணவீக்கம் 3 மாதங்கள் காணாத சரிவு

உணவுப் பொருள்களின் விலைகள் - குறிப்பாக காய்கறிகளின் விலைகள் - வீழ்ந்ததால் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

Din

உணவுப் பொருள்களின் விலைகள் - குறிப்பாக காய்கறிகளின் விலைகள் - வீழ்ந்ததால் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் மொத்த விலைக் குறியீட்டு எண் (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் தொடா்ந்து நான்கு மாதங்களாக உயா்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் 3.36 சதவீதமாக இருந்தது. அது, கடந்த ஜூலை மாதத்தில் 2.04 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது முந்தைய 3 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச மொத்தவிலை பணவீக்கம் ஆகும். இருந்தாலும், முந்தைய 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். அப்போது நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 1.23 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT