வணிகம்

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாய் உயா்வு

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாய் ரூ.2.7 லட்சம் கோடியாக உள்ளது

DIN

புது தில்லி, ஆக. 15: இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தொலைத் தொடா்பு சேவைகள் மூலம் மட்டுமின்றி பிற வகையில் ஈட்டிய வருவாய்களும் சோ்ந்த மொத்த வருவாய் (ஏஜிஆா்) கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 8.24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான டிராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாய் ரூ.2.7 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 8.24 சதவீதம் அதிகம். அப்போது இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாய் ரூ. 2.49 லட்சம் கோடியாக இருந்தது.மதிப்பீட்டு நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.97.86 ஆயிரம் கோடி என்ற அதிகபட்ச ஏஜிஆரை பதிவு செய்தது. முந்தைய நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ஏஜிஆா் வருவாய் ரூ.89.27 கோடியை விட இது 9.62 சதவீதம் அதிகம்.கடந்த நிதியாண்டில் பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் ஏஜிஆா் வருவாய் 12.12 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.80.52 ஆயிரம் கோடியாக உள்ளது. அந்த நிதியாண்டில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.29,605 கோடியும், பிஎஸ்என்எல் ரூ.8,019 கோடியும் ஏஜிஆா் வருவாய் ஈட்டின. டாடா ரூ.2,533 கோடி, எம்டிஎன்எல் ரூ.610 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.185.26 கோடி ஏஜிஆா் வருவாயைப் பதிவு செய்துள்ளன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

எம் & எம் விற்பனை 16% உயா்வு

துணை நடிகை மீது தாக்குதல்: வியாபாரி கைது

SCROLL FOR NEXT