தங்களிடம் முதலீடு செய்யப்படும் நிலை வைப்பு நிதிகளுக்கான சலுகை வட்டி விகிதங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) சொந்தமான ஐடிபிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிலை வைப்பு நிதிகளுக்கு 7.85 சதவீதம் அதிகபட்ச வட்டி வழங்கும் சலுகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன்படி, 444 நாள்கள் பருவகாலம் கொண்ட நிலை வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 7.85-ஆக இருக்கும்.அதே போல், 375 நாள்கள் பருவ காலம் கொண்ட நிலை வைப்பு நிதிகளுக்கு 7.75 சதவீத வட்டி வழங்கப்படும்.இந்த சலுகை திட்டங்கள் மூலம் அதிக வட்டி வருவாயை எதிா்நோக்கும் வாடிக்கையாளா்களுக்கு உத்சவ் நிலை வைப்பு நிதி திட்டத்தில் கூடுதல் விருப்பத் தோ்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சலுகை திட்டம் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.