மும்பை பங்குச் சந்தை  
வணிகம்

நிலையற்ற வர்த்தகத்தைத் தொடர்ந்து, உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

கலவையான உலகளாவிய போக்குகளுக்கு மத்தியில், வாடிக்கையாளர்கள் ப்ளூ சிப் பங்குகளை வாங்கியதைத் தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிந்தது.

DIN

மும்பை: கலவையான உலகளாவிய போக்குகளுக்கு மத்தியில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய ப்ளூ சிப் பங்குகளை வாடிக்கையாளர்கள் வாங்கியதைத் தொடர்ந்து பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சற்று உயர்ந்து முடிந்தது.

தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தையின் டாப் 30 பங்குகளின் பி.எஸ்.இ. சென்செக்ஸ் 33.02 புள்ளிகள் உயர்ந்து 81,086.21ல் நிலைபெற்றது.

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 169.93 புள்ளிகள் குறைந்து 80,883.26 ஆக வர்த்தகமான நிலையில், அது மீண்டும் 178.3 புள்ளிகள் உயர்ந்து 81,231.49 என்ற உச்சத்தைத் தொட்டது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11.65 புள்ளிகள் உயர்ந்து 24,823.15 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், சன் பார்மாசூட்டிகல், பார்தி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், இன்போசிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.

பெட் தலைவர் ஜெரோம் பவல் உரைக்கு முன்னதாக, கலவையான உலகளாவிய சந்தைப் போக்குகளுக்கு மத்தியிலும் இந்திய குறியீடுகள் நிலையற்ற வர்த்தகத்தில் இருந்ததாக ஜியோஜித் நிதி சேவைகளின் தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் ஆசிய சந்தைகள் கலவையாக முடிந்தது. அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமையன்று ரூ.1,371.79 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,971.80 கோடி மதிப்புள்ள பங்குகளை மீண்டும் வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.01 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 78 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT