கோப்புப் படம் 
வணிகம்

ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது.

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,388.26 புள்ளிகளில் தொடங்கி அதிகபட்சமாக 81,824.27 புள்ளிகளை எட்டியது.

முடிவில், செக்செக்ஸ் 611.90 புள்ளிகள் உயர்ந்து 81,698.11 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187.45 புள்ளிகள் உயர்ந்து 25,010.60 புள்ளிகளில் நிறைவடைந்தது.

ஐடி நிறுவனங்கள், உலோகத் துறை பெருமளவில் ஏற்றம் கண்டுள்ளன.

சென்செக்ஸில் ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, டைட்டன், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் என பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றம் கண்ட நிலையில் ஐடிசி, மாருதி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டியில் ஹிண்டால்கோ, ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, ஓஎன்ஜிசி, பஜாஜ் பின்சர்வ் ஆகியவை ஏற்றம் கண்டன. அதேநேரத்தில் அப்போலோ ஹாஸ்பிடல், ஹீரோ மோட்டார்கார்ப், நெஸ்லே இந்தியா, அதானி போர்ட்ஸ் பங்குகள் விலை குறைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT