தங்கம் விலை மீண்டும் உயர்வு!
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...
சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 57,200-க்கு விற்பனையான நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று ரூ. 480 குறைந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ரூ. 57,040-க்கும் ஒரு கிராம் ரூ. 7,130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : திருவண்ணாமலை: மண் சரிவில் பலியானோரின் உறவினர்கள் போராட்டம்!
வெள்ளியின் விலை மாற்றமின்றி 5-வது நாளாக ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.