ஹோண்டா மோட்டாா்சைக்கிள்  
வணிகம்

ஹோண்டா இரு சக்கர வாகன விற்பனை அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டா் இந்தியாவின் உள்நாட்டு விற்பனை கடந்த நவம்பரில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

புது தில்லி: முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா்சைக்கிள்அண்ட் ஸ்கூட்டா் இந்தியாவின் உள்நாட்டு விற்பனை கடந்த நவம்பரில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 4,32,888-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது மூன்று சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,20,677 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் 27,172-ஆக இருந்த ஏற்றுமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 39,861-ஆக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,47,849-லிருந்து 4,72,749-ஆக உயா்ந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT